×

வயது வித்தியாசம் இல்லாமல் தொழிலை செய்யும் நயன் தாரா.!!


ஐயா படத்தில் அறிமுகமான நயன் தாரா, தன்னுடைய தந்தை வயதுள்ள நடிகர்களான ரஜினிகாந்த், பாலகிருஷ்ணா, நாகார்ஜுனா, ஆகியோர்களுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தன் வயதைவிட கொஞ்சம் அதிகமுள்ள விஜய், அஜீத், ஆகிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்து தன் வயதுக்கு சமமாக உள்ள  தனுஷ், சிம்பு, விஷால் போன்ற இளையதலைமுறை நடிகர்களுக்கும் ஜோடி போட்டார். தற்போது தன்னைவிட வயது குறைந்த ஜெய்யுடனுடம் நடித்துவிட்டார்.
இந்த சாதனையை இதுவரை யாரும் தமிழில் செய்ததாக தெரியவில்லை. மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தாலும் பணத்தில் மட்டும் கறார் பார்ட்டி. பணம் கொடுத்தால் போதும், ஹீரோக்களின் வயது குறித்து கவலை இல்லை என்ற கொள்கையை உடையவர் நயன் தாரா.
தற்போது மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் நயன், ஜெயம் ரவியுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தை அவருடைய அண்ணன் ஜெயம் ராஜா இயக்குகிறார். மேலும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
2003ஆம் ஆண்டு மலையாளப் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நயன், சுமார் பத்து வருட காலமாக அசைக்க முடியாத ஹீரோயினியாக வலம் வந்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் மூன்று வருடங்களுக்கு நடிக்கும் அளவுக்கு படங்களை கையில் வைத்திருக்கிறார்.