×

ஜீன்ஸ் 2 ரெடி!

ஷங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1998ல் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் ஜீன்ஸ். ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான இப்படத்தை அசோக் அமிர்தராஜ் தயாரித்திருந்தார்.


தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகமாக  'ஜீன்ஸ் 2'வின் டைட்டிலை பிலிம் சேம்பரில் பதிவு செய்திருக்கிறார் தியாகராஜன்.


பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கவிருக்கும் இப்படத்தை தியாகராஜன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்' மூலம் தயாரிக்கவுள்ளார்.


மேலும் இப்படத்தின் இயக்குனர், கதாநாயகி பற்றிய  ஏனைய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.


தற்போது, தமிழ் சினிமாவில் இரண்டாம் பாகங்கள் வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.