×

விமலையும் படகராகியுள்ளார் இமான்!!

இயக்குனர் கண்ணன் தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விமல்- சூரி நடிக்கின்றனர். நாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். டி.இமானின் இசையில் உருவாகும் இப்படத்தை, குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்.
சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்காக நடிகர் விமல் ஒரு பாடலை பாடியுள்ளார். தான் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களிலும் ஏதாவது ஒரு புதுமையை செய்து வருபவர் டி.இமான்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனையும், ஜில்லா படத்தில் விஜய்யையும் பாட வைத்து அழகு பார்த்தார். இவ்விரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட். தற்போது அந்த வரிசையில் விமலையும் பாட வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.