அஜீத், அனுஷ்கா, நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் அஜீத் படத்தில் இருந்து கவுதம் மேனன் திடீரென விலகியதாக இணையதளங்களில் செய்திகள் வெளிவந்து பெருங்குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
உண்மையில் நடந்தது என்னவென்றால், அஜீத் படத்தில் கவுதம் மேனனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அந்த கேரக்டருக்கு வேறு ஒரு பிரபல நடிகர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால், அஜீத் நடிப்பதில் நடிப்பதாக இருந்த முடிவை கவுதம் மேனன் மாற்றிக்கொண்டார். உண்மை இவ்வாறு இருக்க சில இணையதளங்கள் அஜீத் படத்தில் இருந்தே கவுதம் மேனன் விலகிவிட்டதாக செய்திகள் வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கவுதம் மேனன் வருத்தம் தெரிவித்துக்கொண்டார்.
இந்த படத்தின் அனுஷ்காவை தவிர இரண்டாவது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எமியின் காட்சிகள் அனைத்தும் லண்டனில் படமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எமி ஜாக்சனின் சொந்த ஊர் லண்டன் என்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுதம் மேனன் - ஹாரீஸ் ஜெயராஜ் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது.
