×

நயன்தாராவுக்கு அட்டாக் கொடுக்கும் ஹன்சிகா!

சிம்பு ஹன்சிகா பிரிவுக்கு பிறகும் அடங்காத ஹன்சிகா தன்னுடைய காதல் முறிவுக்கு காரணமாக நினைக்கும் நயன்தாராவுக்கு ,அட்டாக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
அதாவது, அவர் அடுத்தடுத்து நடிப்பதற்கு எந்தெந்த கம்பெனிகளிடம் பேசுகிறாரோ அந்த கம்பெனிகளுக்கு தானும் விசிட் அடிக்கிறாராம். அதோடு, நயன்தாராவை விட குறைவான கூலியில் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சொல்லி படங்களை தன் பக்கம் இழுத்து வருகிறாராம்.

இதனால், செகண்ட் இன்னிங்சில் இதுவரை போட்டி இல்லாத களத்தில் கம்பு சுற்றி வந்த நயன்தாரா, இப்போது ஹன்சிகா என்றொரு போட்டியாளர் உருவாகியிருப்பதால் அவரை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியாமல் தடுமாறிப்போய் நிற்கிறார்.

Tags : Simbu, Nayanthara, Hansika Motwan