பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக வந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடித்த'பாஸ் என்கிற பாஸ்கரன்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றியை வெற்றது. ரஜினியின் எந்திரன் சமயத்தில் தைரியமாக ரிலீஸ் செய்து எந்திரன் சுனாமியில் இருந்து தப்பிய ஒரே படம் இதுதான்.
இந்த படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ், இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார். ஆர்யா, தனது சொந்த நிறுவனமான "The Show People" என்ற நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என கருதிய ராஜேஷ், நயன்தாராவிடம் சென்று கதையை கூறியுள்ளார். ஆனால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆர்யாவுடன் 'ராஜா ராணி' படத்தில் நடித்த போது ஏற்பட்ட மனக்கசப்புதான் இந்த மறுப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆர்யாவுடன் நயன்தாரா சிறிதுகாலம் நெருக்கமாக இருந்ததாகவும், ஆனால் ஆர்யா திடீரென தனது கவனத்தை அனுஷ்கா பக்கம் திருப்பியதால் நயன்தாரா கோபம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆர்யாவுடன் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.