×

சிறையில் கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு!.



அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. விர்ஜீனியாவில் தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அவரது பெயர் மாரா பஸ்ஸல். இவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து பஸ்ஸலால் இருக்க முடியவில்லை. இதையடுத்து நன்றாக குடித்தார். 

பின்னர் டிரஸ் கூட போடாமல் நிர்வாணமாகவே ஆர்லிங்டன் கவுன்டி சிறைக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் இவர் வந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். என்ன ஏது என்று விசாரித்தபோது தனது கணவரைப் பார்க்க வந்ததாக கூறினார் பஸ்ஸல். 

இதையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் குடித்ததாகவும் கூறி அவரைக் கைது செய்தனர். இவரை கோர்ட்டுக்கு எப்படிக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை. டிரஸ் போட்டுக் கூட்டிப் போனார்களா அல்லது அப்படியே கூட்டிக் கொண்டு போனார்களா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை....!