பொதுமக்களிடையே புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து விளக்குவதற்காக நடிகை த்ரிஷா, தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதிகமாக மேக்கப் போடுவதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் கூறப்பட்டிருந்தது.
இதனால் பொதுமக்களிடையே புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மேக்கப்புகளை குறைத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், தன்னுடைய மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை த்ரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். த்ரிஷாவை தொடர்ந்து அவரை ஃபாலோ செய்யும் பலர் அதே பக்கத்தில் தங்கள் மேக்கப் இல்லாத புகைப்படத்தினை பதிவு செய்து த்ரிஷாவின் முயற்சிக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதில் நடிகை தன்ஷிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவின் இந்த புதிய முயற்சிக்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஒருசிலர் மட்டும் த்ரிஷா தங்களை பயமுறுத்திவிட்டதாக கமெண்ட் அளித்துள்ளனர்.