தேசியவிருது பெற்ற பட இயக்குனரான சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’ இந்தபடத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்கிறார் . படத்தின் கதைப்படி மலைப்பகுதியை சேர்ந்த விவசாயம் பார்க்கும் பெண்ணாக நடிக்கிறாராம்.
இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகை மனிஷா யாதவ். தொடர்ந்து ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘ஜன்னல் ஓரம்’ போன்ற படங்களில் நடித்தார். தற்போது அவர் ‘பட்டய கிளப்பு பாண்டியா’, ‘ஈட்டி’ ஆகிய இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
‘இந்தப் படத்திற்காக பல நடிகைகளை டெஸ்ட் ஷூட் செய்தும் திருப்தியடையாத சீனு ராமசாமி, மனிஷாவின் நடிப்பை பார்த்து உடனே ஓகே சொல்லிவிட்டாராம். படப்பிடிப்பை ஏப்ரலில் துவங்க திட்டமிட்டுளளனர். அதேசமயம், இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக நடிக்கும் விஷ்ணுவுக்குத்தான் இன்னும் ஜோடி செட்டாகவில்லை.