சிம்புவும் ஹன்சிகாவும் தங்களுடைய காதலை வெளிப்படையாக அறிவித்த நாளிலிருந்தே பிரச்சனையாகவே இருந்து வந்தது.இந்த காதலை ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி ஏற்கவில்லை. பின்பு இயக்குநர் பாண்டிராஜ் தன் புதுப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அவர் முன்னாள் காதலி நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததால் பிரச்சனை மேலும் பெரிதானதாக கூறப்படுகிறது.
இதனாலேயே இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. இதனிடையே கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி, தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார். ஹன்சிகாவின் அறிவிப்பால் கோபமடைந்த சிம்பு தற்போது ஹ்ன்சிகாவுடன் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருந்தது. ஹன்சிகாவுடனான காதலால் நிறைய கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். ஆகையால், ஹன்சிகாவுடனான தொடர்பை முறித்துக் கொண்டேன் தற்போது நான் யாரையும் காதலிக்கவில்லை, தனியாகத்தான் இருக்கிறேன்.
ஆழ்ந்து யோசனைக்கு பிறகே இதை முடிவு செய்துள்ளேன். ஹன்சிகா எனது கடந்த காலம். எந்த கட்டாயத்தினால் இந்த முடிவை எடுத்தேன் என்பதை இங்கே நான் கூறமுடியாது.
இந்த அறிக்கையை என்னுடைய நண்பர்கள், நெருங்கியவர்கள், ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளேன். இப்போதைக்கு என்னுடைய நடிப்பில் மட்டுமே கவனத்தை செலுத்த உள்ளேன். இந்த முடிவால் நான் மிகவும் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.