வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரியாணிக்குப் பிறகு புதுமுகங்கள் நடிக்கும் படத்தை இயக்குவதாக வெங்கட்பிரபு கூறி வந்தார். அந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க அஜித் முன்வந்ததாகவும் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் சூர்யாவிடம் வெங்கட்பிரபு சொன்ன ஒன்லைன் அவருக்குப் பிடித்துப் போக, புதுமுகங்கள் புராஜெக்டை தள்ளி வைத்து சூர்யாவுக்கு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்தார். படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பதாக ஏற்பாடு.
வெங்கட்பிரபுவின் வழக்கமான ஜாலி மூடில் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. தற்போது அஞ்சானில் நடித்து வரும் சூர்யா ஏப்ரலில் வெங்கியின் படத்தில் நடிக்கயிருக்கிறார். அனேகமாக ப்ரியங்கா சோப்ரா சூர்யாவின் ஜோடியாக இருக்கலாம் என்கிறார்கள்
