மேற்கு வங்க மாநிலம் காரக்பூரில் ஐஐடி மாணவர் ஒருவர் ஒரு பெண்ணின் நிர்வாணப் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் சுராஜித் குமார் ஜெயின் (18). இவர் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றி வரும் பெண்ணின் நிர்வாணப் படங்களை இன்டர்நெட்டில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், சத்தீஸ்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மாணவர், காரக்பூப் ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து படங்களை பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, அந்த மாணவர் இரண்டு மாதமாக கல்லூரிக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.