இயக்குனர் வெங்கட் பிரபுவின் முதல் படமான சென்னை 28 டில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க வைபவ்வைத்தான் முதலில் அழைத்தாராம். ஆனால், அவரோ, தனது தந்தை தெலுங்கில் பெரிய இயக்குனர், அவர் இயக்கபோகும் அடுத்த படத்தில் தான் அறிமுகமாகப் போவதாக சொல்லி அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் . அப்படி அவர் மறுத்ததால் தான் அப்படத்தில் ஜெய்யை நடிக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. ஆனால், அந்த படமே ஜெய்க்கு பெரிய என்ட்ரியாகி விட்டது.
இதை சமீபத்தில் வைபவ் நடித்து வெளிவரவிருக்கும் "டமால் டுமீல்" படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்த வெங்கட்பிரபு. இந்த படத்தில் தான் ஒரு முழுநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் வைபவ். ஆனால், என் படத்தில் நடித்திருந்தால் அவர் எப்போதோ தமிழில் பெரிய நடிகராகியிருப்பார். என்ன தான் வாய்ப்புகள் அமைந்தாலும் நேரம் கைகூடும்போது தான் எதுவும் நடக்கும் என்பது இதிலிருந்து தெரிகிறது என்று சொன்ன வெங்கட்பிரபு, எனது மங்காத்தா படத்தில் அவருக்கு நான் வெயிட்டான வேடம் கொடுத்ததைப் பார்த்து தான் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக அவரை கமிட் பண்ணியிருக்கிறார்கள். ஆக, இப்போதும் நானே வைபவ் ஹீரோவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறேன் என்கிறார்.