தற்போது பிசியான நடிகையாக அஜீத்துடன் ஆரம்பம் படத்தில் நடித்ததின் மூலம் ரீ-என்ட்ரி ஆன நயன்தாரா போன்று, வீரம் படத்தில் என்ட்ரியான தமன்னாவும் தெலுங்கு, ஹிந்தி என பிசியாகத்தான் இருக்கிறார்.
இரண்டு மொழியிலுமே முன்னணி ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறார் தமன்னா. அதாவது ஹிந்தியில், அக்சய்குமார், சைப் அலிகான் போன்ற ஹீரோக்களுடன் டூயட் பாடி வருபவர், தெலுங்கில் அனுஷ்கா-பிரபாஸ் நடிக்கும் பாகுபாலி மற்றும் மகேஷ்பாபு நடிக்கும் ஆக்டு போன்ற படங்களிலும் நடிக்கிறார்.
இதற்கிடையில் தொடர்ந்து காதலிப்பது, கவர்ச்சி காட்டுவது என்று எல்லா காட்சியிலும் நடித்து வருவது அவருக்கு மிகவும் போரடித்து விட்டது. அதனால் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி ஹீரோக்களின் தோளில் தொங்குவதும், முதுகில் ஏறுவதுமாக நடிப்பது என்று தனது மனக்குமுறலை சில டைரக்டர்களிடம் கொட்டி தீர்த்து வருகிறார் தமன்னா.
அப்படியென்றால் உங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஆசைபடுகிறீர்கள் என்று கேட்டபோது, விஜயசாந்தி போல ஆக்சன் செய்யணும், அடுத்தப்படியாக கெட்டப்பெண் அதான் வில்லியா நடிக்கணும். இப்படியெல்லாம் நடிக்கிறபோது, இன்னும் வெரைட்டியா நடிக்க முடியும். கதாநாயகியாக நடித்தால் அந்த வட்டத்தை விட்டு தாண்ட முடியாது. ஆனால் வில்லின்னா வட்டத்துக்குள்ள நிற்காமல் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாமே? அப்படி நடிக்கிறபோது வித்தியாசமான பர்பாமெனஸ காட்டி ஸ்கோர் பண்ணலாம் என்று தனது மனதில் இருக்கும் ஆசையை கொட்டி வருகிறார்.
இந்தளவுக்கு நடிப்பின் மீது அதிகம் மோகம் கொண்டவரா தமன்னா என்று வியந்தவாகள், இந்த நடிப்பு தாகத்தை நேரம் வரும்போது உங்களுக்குள் இருக்கிற கெட்டப்பெண்ணை களத்தில் இறக்கி விடுகிறோம் என்று வாக்குறுதி அளித்துளளார்கள்.