புகைப்படங்கள் பகிர பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் இணையத்தளத்தினூடாகவே இந்த இளைஞர் பிரபல்யமாகியுள்ளார். டுபாயைச் சேர்ந்தவர் என நம்பப்படும் 17 வயதான ஹுமைட் அல்-புகைஸ் எனும் பெயரிலேயே இந்த இளைஞர் அறியப்பட்டுள்ளார்.
பலரும் வாழ ஆசைப்படும் வகையில் உயர்ரக கார்கள் மற்றும் படகுகளில் சிறுத்தை, சிங்கங்களுடன் இணைந்து போஸ் கொடுத்து அவற்றை இணையத்தளத்தில் தரவேற்றம் செய்து வருகின்றார்.
சற்றும் அச்சம் இன்றி அவற்றின் வாய்க்குள் கை, தலையை புகுத்தியும் அவை சாப்பிடும் போது அவற்றின் அருகில் இருந்தவாறும் புகைப்படமெடுத்துள்ளார்.
இந்த மிருகங்கள் ஹுமைடின் செல்லப்பிராணிகளா? அல்லது தான் வீரன் எனக் காண்பிக்கவா? அல்லது இவர் கிறுக்குப் பிடித்வரா? எனத் தெரியவில்லை என பலவாறான கருத்துகள் வெளியாகியுள்ளன. ஆனால் பலரும் வாழ ஆசைப்படும் செல்லவந்த வாழ்க்கை வாழ்கிறார்.
தொடர்ச்சியாக இவர் வெளியிடும் புகைப்படங்களால் ஈர்க்கப்பட்டு குறித்த இணையத்தளத்தில் இவரை சுமார் இரண்டரை இலட்சம் பேர் தொடர்கின்றனர் (Following).
சுமார் 66 இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளை சிங்கங்களை வைத்திருக்கும் இந்த இளைஞர், தன்னிடமுள்ள போதுமான பணத்தினால் தன்னால் நினைத்ததை வாங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இவை விலங்குகளின் உரிமைகளை துஷ்பிரயோகப்படுத்துவதாக அமைவதாக உள்ளது.
ஏற்கனவே 2010ஆம் ஆண்டளவில் டுபாயில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 200 விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.