×

விமல் நடிக்கும் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா”

ஜெயம் கொண்டான்,கண்டேன் காதலை,வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களை தொடர்ந்து, கண்ணன் இயக்கும் ஐந்தாவது படம் "ஒரு ஊர்ல ரெண்டு ராஜா”.இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார், இவரது ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்க, சூரி, நாசர், தம்பிராமையா, சிங்கம்முத்து, சாஷா, சுருதிரெட்டி, அனுபாமா சுப்பிரமணியம், ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.குளோபல் என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார்.
சமிபத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் “ இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது. வரும் ஜூலை மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வரும் இரயிலில் நடக்கும் எதார்த்தமான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. முதல் பாதி வரை இரயிலிலும், இரண்டாம் பாதி கார் பயணம், ஆக் ஷன், காமெடி என கமர்ஷியலான பயணமாக இருக்கும். விமல், சூரி, பிரியாஆனந்த் மூவரின் நோக்கம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதை மிக ஜணரஞ்சகமான முறையில் சொல்ல இருக்கிறேன் என்று இப்படத்தை பற்றிய முதல் செய்தியை சொன்னார் இயக்குனர் கண்ணன்.