சீனுராமசாமியின் அடுத்த கட்டம்
நீர்ப்பறவை திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சீனுராமசாமி, இடம் பொருள் ஏவல் திரைப்பட கதையில் பரபரப்பாக உள்ளார்.
விஜய்சேதுபதி, விஷ்ணு நடிப்பில் வெளிவர இருக்கும் இப்படத்தில் சீனுராமசாமியால் முதன்முறையாக யுவன்சங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில் பாடல்கள் உருவாக்க உள்ளதாம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு கைகோர்க்க உள்ளார்கள் யுவன், கவிபேரரசு. திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு 35 நாட்களுக்கு தொடர்ந்து ஷூட்ங் நடத்த உள்ளார்களாம்.
தென்மேற்கு பருவகாற்றுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் சீனுராமசாமியோடு சேர்ந்துள்ளார் விஜய்சேதுபதி.