×

சிம்பு மீது போலீஸில் புகார்! ஹன்சிகாவின் அம்மா எடுத்த அதிரடி முடிவு!

சமீப நாட்களாக நடக்கும் சம்பவங்களை எல்லாம் கேள்விப்படுகிறபோது, சிம்பு - ஹன்சிகா காதல் முடிவுக்கு வந்துவிட்டது என்றே தோன்றுகிறது! நயன்தாராவும் சிம்புவும் ஜோடி சேர்ந்த பிறகு உடைய ஆரம்பித்த சிம்பு - ஹன்சிகா உறவு, ஏறக்குறைய க்ளைமாக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று ஹன்சிகா போட்ட ட்வீட்டுக்குப் பிறகு பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. ‏@ihansika Happy valentines day to everybody , celebrating my day with my single ladies . :) - என்று 'காதலர் தினத்தை என்னைப் போன்ற சிங்கிள் லேடி உடன் கொண்டாடுகிறேன்' என்று அர்த்தம்தொனிக்கும் வகையில் ட்வீட் பண்ணிய ஹன்சிகா, தன் தோழி உடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டார்.


இதன் மூலம் சிம்புவுக்கும் தனக்குமான உறவு முறிந்துவிட்டது என்பதை சூசகமாக வெளிப்படுத்தினார். அதைப் பார்த்த பலரும் சிம்புவிடம் துக்கம் விசாரிக்க, கடுப்பாகிவிட்டாராம் சிம்பு. ஹன்சிகாவுக்கு போன் பண்ணி காய்ச்சி எடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, அடிக்கடி போன் செய்து காச் மூச் என்று கத்திக்கொண்டே இருந்திருக்கிறார். அதன் பிறகு சிம்புவின் போன்கால் வந்தால் அட்டெண்ட் பண்ணாமல் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார் ஹன்சிகா.

தன்னுடைய போன்காலை ஹன்சிகா அட்டெண்ட் பண்ணவில்லை என்றதும் மேலும் உக்கிரமான சிம்பு, குறுஞ்செய்திகளை அனுப்பி ஹன்சிகாவுக்கு குடைச்சலைக் கொடுத்திருக்கிறார். அவரது குடைச்சல் எல்லை மீறிப்போக, கொதித்தெழுந்துவிட்டார் ஹன்சிகாவின் அம்மா. சிம்பு கொடுத்த டார்ச்சர் காரணமாக தன் மகள் மனரீதியாக பாதிக்கப்படுவதைக் கண்ட ஹன்சிகாவின் அம்மா, முதல்கட்டமாக இந்த விஷயத்தை டி.ராஜேந்தரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல முடிவு செய்திருக்கிறார். சிம்புவை கண்டித்து வையுங்கள், இல்லை என்றால் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப்போகிறேன்