வரும் ஜனவரி 10ஆம் தேதி அஜீத் நடித்த ‘வீரம்’ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவரது முந்தைய படங்கள் குறித்த ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றன.அஜீத்துக்கு V என்ற எழுத்து மிகவும் ராசியானது என்றும் செண்டிமெண்டாக V என்ற எழுத்தில் தொடங்கும் அவரது படங்கள் அல்லது கேரக்டரின் பெயர் உடைய படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது என்றும் அவரது ரசிகர்களால் இணையதளங்களில் கூறப்பட்டு வருகிறது.
வாலி, வரலாறு, வில்லன் ஆகிய படங்கள் அஜீத்தின் மார்க்கெட்டை நிமிர்த்திய படங்கள். அதுபோல் மங்காத்தா படத்தில் அவருடைய கேரக்டரின் பெயர் விநாயக் மகாதேவ். இதுவும் V என்ற எழுத்தில் தொடங்கியதுதான். இந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்று அஜீத்துக்கு புகழ் கொடுத்த படங்கள். வீரம் படத்தில் டைட்டிலும் V என்ற எழுத்தில் உள்ளதாகவும் இந்த படத்தில் அஜீத் கேரக்டரின் பெயர் விநாயகம் என்ற பெயரும் V என்ற எழுத்தில் உள்ளதாலும், இந்த படம் மாபெரும் வெற்றியை பெறும் என அவரது ரசிகர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் கூறிவருகின்றனர்.
மேலும் வாலி, வரலாறு, வில்லன் ஆகிய படங்களும் அஜீத்துக்கு பிலிம்பேர் விருதை வாங்கிக்கொடுத்த படங்கள். எனவே இந்த செண்டிமெண்ட் வீரம் படத்திலும் தொடருமா? வீரம் அஜீத்துக்கு மற்றொரு மைல்கல்லாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
