×

‘வீரம்’ புரமோஷனுக்கு வரவேண்டாம். தமன்னாவிற்கு கட்டளையிட்ட சிறுத்தை சிவா.!

ஒரு படத்தின் புரமோஷனுக்கு அந்த படத்தில் நடித்த ஹீரோக்களோ, ஹீரோயின்களோ வரவில்லை என்றால்தான் அந்த படத்தின் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர் புலம்புவார்கள். ஆனால் அஜீத் நடித்த வீரம் படத்தின் புரமோஷனுக்கு தமன்னாவை வரவேண்டாம் என இயக்குனரே கேட்டுக்கொண்டாராம். இதனால் தமன்னா அதிர்ச்சியில் உள்ளார்.
சமீபத்தில் வீரம் படத்தின் புரமோஷன் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் எடிட்டர், ஆர்ட் டைரக்டர், ஸ்டண்ட் மாஸ்டர் ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள நாயகி தமன்னாவும், மற்றொரு நாயகனான விதார்த்தும் தயாராக காத்திருந்தனர். ஆனால் இயக்குனர் சிறுத்தை சிவா, தமன்னாவிற்கு போன் செய்து, ‘தயவு செய்து இந்த விழாவுக்கு வரவேண்டாம்’ என்று சொன்னதால் தமன்னா அதிர்ச்சி அடைந்தாராம்.
‘வீரம்’ படம் மட்டுமல்ல, அஜீத் எந்த படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பது தெரிந்த செய்திதான். மேலும் வீரம் படத்தில் தனது கேரக்டரை டம்மியாக்கிவிட்டதாக தமன்னா புலம்பி வருவதாக கடந்த இரண்டு நாட்களாக செய்தி வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்  இந்த புரமோஷனில் தமன்னா கலந்துகொண்டால் ஏற்கனவே படத்தின் கேரக்டர் குறித்து வருத்தத்தில் இருக்கும் தமன்னா, அதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் ஏதாவது உளறிவிட்டால் ரசிகர்களிடையே தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும் என அஜீத், கேட்டுக்கொண்டதால் திடீரென தமன்னாவை இந்த விழா புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
அஜீத் மீது தற்போது தமன்னா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.