×

‘லிப் டூ லிப் கிஸ்…’ : விஷாலுக்காக உடனே ஓ.கே சொன்ன லட்சுமிமேனன்!

பாண்டியநாடு’ படத்தின் அளப்பறையான வெற்றியைத் தொடர்ந்து விஷால் அடுத்து வேஷம் கட்டியுள்ள படம் தான் ‘நான் சிகப்பு மனிதன்’.
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனது ஆஸ்த்தான டைரக்டர் திருவுடன் மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார் விஷால்.
தனது விஷால் பிலிம் பேக்டர் சார்பில் விஷாலே தயாரிக்கும் இந்தப்படத்தை அவர் யு டிவியுடன் இணைந்து தயாரிக்கிறார்.
‘பாண்டியநாடு’ படம் ஹிட்டானதால் செண்டிமெண்ட்டாக மீண்டும் இதில் லட்சுமிமேனன் தான் அவருக்கு ஜோடி.
படத்தைப் பற்றி டைரக்டர் திருவிடம் கேட்டபோது,
ஒவ்வொரு மனிதனின் ஆசைகளைப் பற்றிய கதைதான் இந்தப்படம். சினிமாவில் போலீஸ் முதல் பொறுக்கி வரை ரொம்ப நல்லவன், துரோகி, விரோதி என எல்லாவற்றுக்கும் முன் உதாரணங்கள் உண்டு. ஆனால் இந்தப்படத்தில் விஷாலின் கேரக்டருக்கு இதுவரை எந்த முன் உதாரணமும் இல்லை. அந்தளவுக்கு கதையையும், அவருடையே கேரக்டரையும் வடிவமைத்துள்ளேன் என்றவர்,
படத்தில் லட்சுமிமேனனின் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். படத்தின் கதைக்கு அவருடைய முத்தக்காட்சி தேவைப்பட்டது. அதைச் சொல்லி புரிய வைத்ததும் மறுப்பேதும் சொல்லாமல் முத்தக்காட்சிக்கு ஓ.கே சொல்லி விட்டார்.
நான் விஷாலுக்கு நெருங்கிய நண்பராக இருப்பதால் இந்தப்படம் கிடைக்கவில்லை. நண்பர்கள் என்றால் பணம் கொடுப்பார்கள், படம் கொடுப்பார்களா..? படத்தின் கதையைக் கேட்டுத்தான் விஷால் எனக்கு இந்த சான்ஸைக் கொடுத்தார் என்றார் டைரக்டர் திரு.
படம் வருகிற சம்மரி சீஸனில் ரிலீசுக்கும் தயாராகி வருகிறது.