×

அம்மா ஆகிறார் நயன்தாரா !!! குழப்பத்தில் இயக்குனர்!!

கர்ப்பிணி அம்மா  வேடத்தை நயன்தாரா ஏற்க மறுத்ததால் அதில் இயக்குனர் சில மாற்றங்களை செய்தார். இந்தியில் வித்யாபாலன் நடித்த படம் கஹானி.

 இப்படம் தெலுங்கில் அனாமிகா என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். ஆனால் ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா கர்ப்பமாக நடிக்க தயக்கம் காட்டினாராம்.

இதனால் இயக்குனர் சேகர் கம்முலா சில மாற்றங்களை ஸ்கிரிப்ட்டில் செய்திருக்கிறார். படத்தின் முக்கிய அம்சமே நயன்தாராவின் கேரக்டர்தான், அதில் மாற்றம் செய்ய சொல்லி நயன்தாரா குளறுபடி செய்ததால் இயக்குனர் அப்செட் ஆகிப்போனாராம்.

ஆனாலும் கேரக்டர் பாதிக்காத வகையில் அவர் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. அனாமிகா என்ற பெயரிலேயே தமிழில் வெளியிடுவதா அல்லது பெயரை மாற்றுவதா என முடிவு செய்யப்படவில்லையாம். இன்று இப்படத்தின் டிரைலர் ஐதராபாத்தில் வெளியிடப்படுகிறது.

 படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.