×

ஃபேஸ்புக்கில் ரஜினியை அவமதித்தாரா பரோட்டா சூரி? பரபரப்பு தகவல்கள்!!

நேற்று தமிழகம் முழுவதும் ஃபேஸ்புக்கில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்தது. அது காமெடி நடிகர் பரோட்டா சூரி, ரஜினிகாந்த் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக அவரை பேஸ்புக பயனாளிகள் காய்ச்சி எடுத்தனர். வளர்ந்து வரும் ஒரு காமெடி நடிகர், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள ஒரு நடிகரை கலாய்க்கும் வகையில் கருத்து கூறுவது அவருக்கு தேவையில்லாத வேலை என்று கோலிவுட்டில் அவர் காதுபடவே கண்டித்தனர். இதனால் பரோட்டா சூரி அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரோட்டா சூரி, தனக்கு ஃபேஸ்புக் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், ஃபேஸ்புக், டுவிட்டரில் எல்லாம் அக்கவுண்ட் வைத்து மெயிண்டன் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை என்றும் என்னுடைய பெயரில் யாரோ போலியான அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் தான் தெய்வமாக மதிக்கும் ரஜினி சாரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்ச்சித்துள்ளர்கள் என்று கூறிய அவர் இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். போலி பேஸ்புக் அக்கவுண்ட் தனது பெயரில் ஆரம்பித்துள்ள விஷமிகளை.