×

தென்னாப்பிரிக்கா டூர் முடிந்ததும் நேராக நடிகை வீட்டுக்கு விராத் கோஹ்லி சென்றது ஏன்?

இந்திய கிரிக்கெட் அணியினர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக டிசம்பர்31ஆம் தேதி இரவு மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்கள் வந்திறங்கிய நேரம் புத்தாண்டு பிறப்பதற்கு சிலமணி நேரங்களே இருந்ததால் தோனி முதல் அனைத்து வீரர்களும் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் இருந்து அவரவர் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் விராத் கோஹ்லி மட்டும் ஒரு நடிகையின் வீட்டிற்கு சென்றார். அந்த நடிகை யார் தெரியுமா அனுஷ்கா சர்மாதான்?


அனுஷ்கா சர்மா விராத் கோஹ்லியை அழைத்து வர BMW கார் ஒன்றை விமான நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். அவர் உடனே அதில் ஏறி இரவில் அனுஷ்கா சர்மா வீட்டுக்கு சென்றார். அங்கு இருவரும் விடிய விடிய உற்சாக பானம் அருந்தி புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடினார்களாம். இந்த கொண்டாட்டத்தில் அனுஷ்கா சர்மாவின் மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருந்தனர். பின்னர் அதிகாலை நேரத்தில்தான் விராத் கோஹ்லி தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை மும்பையில் உள்ள இந்தி பத்திரிகை செய்தியாக வெளியிட்டதால் தற்போது சமூக இணைய தளங்களில் இதை பற்றிய கிசுகிசு வெகு வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் இருவரும் ஒரு ஷாம்பு விளம்பரத்தில் நடித்ததில் இருந்தே காதல் வந்துவிட்டதாகவும், அதை அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.