×

விரல்களை வைத்தே கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகை.

இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் லாரா வில்லியம்ஸ் என்ற விளம்பர நடிகையை தெரியாதவர்கள் மிகவும் குறைவு. அந்த அளவுக்கு உலகின் பல விளம்பரத்திற்கு மாடலாக வந்து அசத்தியுள்ளார். இவர் நடித்த பெரும்பாலான விளம்பரங்களில் நடித்தது இவர் முகம் அல்ல, கைவிரல்களும் கால் பாதங்களும்தான். ஆம் இவர் கைவிரல்கள் மட்டுமே பல விளம்பரங்களில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுபோலவே கோல்கேட் பற்பசை உள்பட பல பற்பசை விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய சீரான பற்கள்தான் இவரை நோக்கி பற்பசை நிறுவனங்கள் ஓடிவருவதன் ரகசியம். அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை இவருடைய பல்வரிசை குறித்து ஒர் கட்டுரையே எழுதியிருக்கிறது என்றால் இவருடைய பல்லின் புகழை பார்த்துக்கொள்ளுங்கள்.
இதுவரை 11 மொழிகளில் நூற்றுக்கணக்கான விளம்பர படங்களில் நடித்துள்ள இவருக்கு திரைப்படங்களில் நடிக்க ஏகப்பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவற்றை இவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. காரணம் இதுதான். ஒரு விளம்பரப்படத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடித்தால் போதுமானது. தேவையான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார்கள். ஆனால் திரைப்படத்தில் நடித்தால் மாதக்கணக்கில் சில நேரங்களில் வருடக்கணக்கில் ஒரே நிறுவனத்திற்கு நடிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் திரைப்படத்தை தவிர்க்கிறேன் என்கிறார். பிழைக்க தெரிந்தவர்தான்…