×

பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம் மையத்தில் அரிவாளால் தாக்கப்பட்ட பெண். அதிர்ச்சி வீடியோ!(Video)


பெங்களூரில் பரபரப்பான மாநகராட்சி அலுவலகம் இருக்கும் சாலையில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க சென்ற ஒரு வங்கி பெண் அதிகாரி ஒருவரை கொள்ளையன் ஒருவன் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த சம்பவம் அந்நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெங்களூரில் வசிக்கும் ஜோதி உதய என்ற 37 வயது வங்கி அதிகாரி ஒருவர் நேற்று காலை ஏழு மணியளவில் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த ஒரு மர்ம மனிதன் மையத்தின் ஷட்டரை மூடி, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து பெண்ணின் கழுத்து, தோள்பட்டை உள்பட பல இடங்களில் வெட்டி தாக்கியுள்ளான்.
                               
பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பறித்துக்கொண்டு உடனடியாக ஷட்டரை திறந்து அந்த இடத்தில் இருந்து மறைந்துவிட்டான்.

இந்த கொடூர காட்சிகள் ஏ.டி.எம் மையத்தில் இருந்த இரண்டு கேமராவிலும் பதிவாகியுள்ளது.