பாஸ் என்ற பாஸ்கரனில் நயன்தாராவுடன் ஜோடி போட்டவர் ஆர்யா. அதன்பிறகு அவர்களது நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது. அதனால்தான், பிரபுதேவாவை விட்டு பிரிந்து நயன்தாரா தடுமாறி நின்றபோது ஓடிச்சென்று தோள் கொடுத்து அவரை அரவணைத்தார் ஆர்யா. அதோடு, சென்னையிலுள்ள தனது வீட்டிலேயே அவருக்கு அடைக்கலம் கொடுத்து அவரது மனதிலும் குடிசை போட்டு குடியேறினார்.
அதையடுத்து, நயன் சினிமாவில் மறுபிரவேசம் செய்தபோது தனது உயிர் நண்பரான விஷ்ணுவர்தன் இயக்கிய ஆரம்பம் படத்தில் நயன்தாராவுக்கு சிபாரிசு செய்து அஜீத்துக்கே ஜோடி சேர்த்தார். அதனால் அந்த விழுதினை பிடித்துககொண்டே பின்னர் சினிமாவில் பிக்கப் ஆகிவிட்டார் நயன்தாரா. அதோடு மீண்டும் அவரது மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியதோடு, இளவட்ட நடிகர்கள் நயன்தாராவின் பாசறைக்குள் படையெடுத்துக்கொண்டிருப்பதால்,இப்போது அவருக்கு ஆர்யாவின் சிபாரிசு தேவையில்லாமல் போய்விட்டது.
இந்நிலையில், அதே ஆரம்பம் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த டாப்சிக்கு இப்போது சிபாரிசுகளை முடுக்கி விட்டு வருகிறாராம் ஆர்யா. தடையறத்தாக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் தான் நடிக்கும் மீகாமன் படத்திற்கு கதாநாயகி தேடப்பட்டு வந்தபோது டாப்சியின் அருமை பெருமைகளை சொன்ன ஆர்யா, சத்தமில்லாமல் அவரை அப்படத்தில் கமிட் பண்ணி விட்டாராம்.
இதனால், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர முடியாமலே தான் மார்க்கெட்டில் இருந்து காணாமல் போய் விடுவோமோ என்று நினைத்துக்கொண்டிருந்த டாப்சி, இந்த திடீர் திருப்பத்தினால் ஆர்யா போன்ற பெரிய மனசுக்காரர்களின் புண்ணியத்தால் எப்படியேனும் டாப் நடிகையாகி விடலாம் என்ற புதிய நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.
