×

சென்சாருக்கு சென்ற மதயானைக் கூட்டம்!

ஜி.வி.பிரகாஷின் மதயானைக் கூட்டம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் கதிர், ஓவியாவோடு ஜோடி சேர்ந்துள்ளார்.

இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படத்தை இன்று தணிக்கை குழுவிற்கு திரையிட அனுமதி வாங்கியுள்ளது படக்குழு.

இப்படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே. பிலிம்ஸ் சதீஷ் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..