| கவர்ச்சியாக நடிக்கச் சொன்ன பிரபல பாலிவுட் இயக்குனரை விரட்டியுள்ளார் விஷாகா சிங். |
| கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் விஷாகா சிங். இவர் கூறுகையில், படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது, எண்ணிக்கையை காட்டுவதற்காக எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ளவில்லை. சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவர் கால்ஷீட் கேட்டு வந்தார். அதில் கவர்ச்சி பளிச்சிடும் வெள்ளை நிற ஷர்ட், சிவப்பு நிற ஷார்ட்ஸும் அணிந்து நடிக்க கேட்டார். இதனை கேட்டு நான் அதிர்ந்து விட்டேன், நடிக்கவும் மறுப்பு தெரிவித்து விட்டேன். எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் சரி முகம் சுழிக்கும் வகையில் நடிக்க மாட்டேன். கதைகள் மட்டும் தான் முக்கியம் என்றும், கண்ணா லட்டு தின்ன ஆசையா தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார். |
