| சமுத்திரக்கனியை பிரிந்தது ஏன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார் சசிகுமார். |
| ஆரம்பகாலத்தில் இணைந்து பணியாற்றிய சசிகுமாரும், சமுத்திரகனியும் இப்போது தனிதனி டிராக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள். இயக்குனர், நடிகன் என்று மாறி மாறி நீங்களே கூட்டணி அமைக்கிறீங்க வெளி படங்கள்ல நடிக்க மாட்டீங்களான்னு கேட்டாங்க, அதுவும் சரிதான் என்று கொஞ்சநாளைக்கு பிரிந்திருக்கலாம் என்று பிரிந்தோம். நான் சுந்தரபாண்டியன், குட்டிப்புலின்னு தனியா போனேன். கனி சாட்டை, நிமிர்ந்த நில்னு தனியாக போறான். இப்போ கனிக்கும், சசிக்கும் சண்டைன்னு சொல்றாங்க. மேலும் கனி எப்போ நடிக்க கூப்பிட்டாலும் நடிக்க தயாராக இருக்கேன் என்றும் நான் எப்ப கூப்பிட்டாலும் அவரும் நடிக்க ரெடியா இருக்காரு எனவும் கூறியுள்ளார். |
