×

லட்சுமி மேனனுடன் கைகோர்க்கும் தனுஷ். அமலா பால் அதிர்ச்சி. !!

கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமி மேனன், அந்த படத்தின் மாபெரும் வெற்றியில் கோலிவுட்டில் ஆழமாக காலூன்றிவிட்டார் என்றே சொல்லவேண்டும். அவர் எந்த நடிகரொடு நடித்தாலும், அதே நடிகர் மீண்டும் ஒருமுறை லட்சுமி மேனனுடதான் அடுத்த படத்திலும் நடிபேன் என அடம் பிடிப்பது ஒரு வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த அளவுக்கு அவர் ஹீரோவுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறப்படுகிறது.
சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமி மேனனுடன் நடித்த சசிகுமார், அடுத்ததாக நடித்த குட்டிப்புலி படத்திலும் லட்சுமி மேனன் தான் ஹீரோயின் என்று பிடிவாதமாக இருந்தார். அதுபோல பாண்டிய நாடு படத்தில் லட்சுமி மேனனுடன் நடித்த விஷால், தற்போது தான் நடித்துக்கொண்டிருக்கும் நான் சிகப்பு மனிதன் படத்திற்கும் லட்சுமி மேனனையே ஹீரோயின் ஆக்கியுள்ளார்.
இந்நிலையில் லட்சுமி மேனனுக்கு தற்போது தனுஷிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தனுஷ் தற்போது வேலையில்லாத பட்டதாரி, மற்றும் அனேகன் போன்ற படங்களில் நடித்தார். அடுத்து தான் சொந்தமாக தயாரிக்கும் ஒரு படத்தில் அடுத்த வருடம் தொடங்க முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு ஹீரோயினாக நடிக்க லட்சுமி மேனனை அவர் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தில் நடிக்க முதலில் அமலாபாலைத்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்திருந்தார் தனுஷ். ஆனால் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது அவர் செய்யும் பந்தாவை பார்த்து அடுத்த படத்திற்கு சான்ஸ் கொடுப்பதை தவிர்த்து விட்டாராம். இதனால் அமலாபால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால் லட்சுமி மேனனின் நிலை ஒரு படி உயர்ந்துள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் நடித்துக்கொண்டிருக்கும் அவர் விரைவில் அஜீத், விஜய், சூர்யா போன்றவர்களின் படங்களிலும் நடிப்பார் என கூறப்படுகிறது.