கடந்த சில நாட்களுக்கு முன்னால்தான் ஜில்லா படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் ஐதராபாத்தில் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள ஒரு இடத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து சண்டைக்காட்சிகள் எடுக்கபட்டன. அந்த சண்டைக்காட்சிகளில் விஜய் மற்றும் மோகன்லால் எதிரிகளிடம் ஆக்ரோஷமாக சண்டை போடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சண்டைக்காட்சிகள் இடையே சில பஞ்ச் டயலாக்குகள் வருவதாகவும், அவை தனக்கு தொல்லை கொடுத்த சில அரசியல்வாதிகளுக்கு விஜய் எச்சரிக்கை விடுவதுபோலவும் வசனங்கள் இருந்ததாக செய்திகள் வெளிவந்தன.
இதுகுறித்து படக்குழுவினர் சிலரே அதிருப்தியில் இருந்தனர். ஏற்கனவே ‘தலைவா’ படத்தை பெரிய பிரச்சனைகளுக்குப் பிறகுதான் ரிலீஸ் செய்தார்கள். இந்நிலையில் இந்த பஞ்ச் டயலாக்குகள் தேவையா? என்று குரல்கள் எழுந்தன. ஆனால் விஜய், கண்டிப்பாக இந்த பஞ்ச் டயலாக்குகள் படத்தில் இடம்பெற வேண்டும் எனவும், வருவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றும் கூறியதாகவும் சொல்லப்பட்டது.
இதன் விளைவு இன்று காலையிலேயே தெரிந்துவிட்டது. ஜில்லா படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி வீட்டில் இன்று காலை அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறையினர் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் இணை தயாரிப்ப்பாளர்களாக ஆர்.பி. செளத்ரியின் மகன்களும் நடிகர்களுமான ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
சதுரங்க ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. முதல் காயை விஜய்யின் எதிர்தரப்பு நகர்த்தி விட்டது. விஜய் இனி என்ன செய்யப் போகிறார் என்றுதான் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்க்கிறது.
