| கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் நடிக்கத் தயார் என கூறியுள்ளார் ஆண்ட்ரியா. |
| கமலின் விஸ்வரூபம், சமீபத்தில் வந்த என்றென்றும் புன்னகை படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார் ஆன்ட்ரியா. இந்த படங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறாராம். இதுகுறித்து ஆன்ட்ரியா கூறுகையில், என்றென்றும் புன்னகை படத்தில் எனக்கு நல்ல வேடம், பாராட்டுகள் குவிகிறது. மேலும் சில படங்களில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். கதைக்கு தேவை என்றால் மட்டும் கவர்ச்சியாக நடிப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதிப்பது சரியல்ல. அதே நேரம் ஆபாசமாக நடிக்கமாட்டேன், நல்ல கதைகளை தெரிவு செய்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன என்று தெரிவித்துள்ளார். மேலும் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக இருந்தாலும் சரி, தனக்கு பிரச்னை இல்லை, ஏற்றுக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். |
