×

ஆந்திராவில் சன்னி புயல்!!

பாலிவுட்டில் கலக்கிய சன்னி லியோன் தற்போது டோலிவுட்டிலும் கால் பதிக்க வருகிறார்.

பாலிவுட் ரசிகர்களை தனது கவர்ச்சியால் கிரங்கடித்து வரும் சன்னிலியோன் தற்போது தெலுங்கில் குத்துப் பாட்டு ஒன்றுக்கு ஆட்டம் போடவுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்தப் படத்தில் ஒப்புக் கொண்டதாகவும், படத்தை பற்றிய வேறு செய்திகளை வெளியிட விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

தற்போது ஹைதராபாத்தில் ‘ஜாக்பாட்’ இந்திப் படத்தின் புரொமோஷனில் இருக்கும் சன்னி லியோன் ஹைதராபாத் பிரியாணி பற்றி கேள்விப்பட்டிருப்பதாகவும், அதை சுவைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழில் ’வடகறி’ படத்தில் நடிகர் ஜெய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார் சன்னிலியோ சன்னிலியோன்.