| கன்னட படத்தில் நடிக்கும் த்ரிஷாவிற்கு சம்பளம் ரூ. 25 லட்சம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. |
| தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து சூப்பர்ஹிட்டான ‘தூக்குடு’ படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்படுகிறது. இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு த்ரிஷாவை அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட அவர் சம்பளமாக ரூ.1 கோடி வரை கேட்டுள்ளார். ஆனால் கன்னடத்தில் ஒரு படத்தின் பட்ஜெட்டே அவ்வளவுதான். எனவே த்ரிஷாவுக்கு இந்தப் படத்தில் நடிக்க ரூ.20 லட்சம் சம்பளம் பேசியுள்ளனர். கன்னடப் பட உலகில் தன் மார்க்கெட் மதிப்பு அதிகமாக வேண்டும் என்றால் முதல் படம் பெரும் வெற்றி பெற வேண்டும். எனவே ரூ 25 லட்சத்துக்கு நடிக்க ஒப்புக் கொண்டாராம் த்ரிஷா. |
.jpg)