| ஹரி இயக்கவிருக்கும் படத்தில் விஷாலுடன் ஜோடி சேரவிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். |
| பாண்டிய நாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் நடித்து வரும் படம், நான் சிவப்பு மனிதன். பாண்டிய நாடு படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது. நான் சிவப்பு மனிதன் படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்தப் படத்தில் விஷாலுடன் ஸ்ருதி ஹாசன் முதன் முதலாக ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
