ஹன்சிகாவுக்கு எப்போதுமே ஒன்பதாம் நம்பர்தான் ராசியாம். அவருடைய டிரைவிங் லைசென்ஸ் நம்பரில் இருந்து வீட்டு கதவு எண் வரை ஒன்பதாம் நம்பர்தான் இருக்குமாம் அல்லது கூட்டுத்தொகை ஒன்பது என்றுதான் வருமாம். அதனால்தான் அவர் வெளியூர் சென்றாலும், வெளிநாடு சென்றாலும் அங்குள்ள ஓட்டல்களில் தங்கும்போது ஒன்பதாம் நம்பர் எண் அறைகளை மட்டுமே வாங்கி பயன்படுத்துவாராம். அவ்வாறு ஒன்பதாம் அறை எண் காலியாக இல்லையென்றால் வேறு ஓட்டலுக்கு போய்விடுவாராம். எனவே அவர் வெளியூர் பயணம் செய்யும்போதெல்லாம் ஒன்பதாம் எண் அறைக்காக தயாரிப்பாளர் தரப்பு படாதபாடு படுவது வழக்கமாகவே இருக்கிறது
ஆனால் சிம்புவை காதலிக்கும்போது மட்டும் இந்த செண்டிமெண்டை காற்றில்
பறக்கவிட்டாராம். அவரோடு ஓட்டல்களில் தங்கியபோது எந்த எண் அறை என்றாலும் மறுப்பு சொல்லாமல் தங்கினாராம். அதனால்தான் அந்த காதல் முறிவடைந்தது என்பது அவரது நம்பிக்கை.
சமீபத்தில் அரண்மனை படத்திற்காக ஜப்பான் சென்றிருந்தபோது ஒன்பதாம் எண் அறை கிடைக்காததால் வேறு எண் அறையில் தங்கவேண்டிய நிலைமை வந்தபோது இரவு முழுவதும் அவர் தூங்கவே இல்லையாம். மறுநாள் எழுந்து ஒன்பதாம் எண் அறையை வாங்கிவிட்டு அதன்பிறகே தூங்கினாராம். இந்த செண்டிமெண்ட்டுக்கு அவரது அம்மாவும் உடந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
