×

மீண்டும் தொப்புள் பிரச்சனையா? பத்திரிகையாளர்களிடம் கெஞ்சிய நஸ்ரியா!!

நஸ்ரியா நடித்து நேரம், நையாண்டி ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும், அவர் ஒப்புக்கொண்ட முதல் படம் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’ என்ற படம்தான். இந்த படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது
இதில் கலந்து கொள்ள கேரளாவில் இருந்து குடும்பத்தினர்களுடன் வந்திருந்தார் நஸ்ரியா. பிரஸ் மீட்டிற்கு முன்னர் மூன்று பாடல்கள் செய்தியாளர்களுக்காக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில் ஒரு பாடலில் அவர் அணிந்திருந்த துப்பட்டா விலகி, நையாண்டி படத்தின் பிரச்சனைக்குரிய பகுதி வெளியே தெரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நஸ்ரியா மீண்டும் பிரச்சனையை கிளப்புவாரா என்று செய்தியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் செய்தியாளர்கள் முன் அதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காத்தார்.
இந்த படத்திலும் பிரச்சனைக்குரிய பகுதி தெரிகிறதே. அதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என நிருபர்கள் கேட்டதற்கு ‘அந்த காட்சி ஆபாசமாகதெரியவில்லை என்று கூறி சமாளித்தார். மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் அதுசம்பந்தமாகவே கேள்வி கேட்டதால் தயவுசெய்து அந்த பிரச்சனையை விட்டுவிட்டு வேறு கேள்விகளை கேளுங்கள் என்று கெஞ்சிக்கேட்டுக்கொண்டார்.