மலையாள நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன் கவுதமியுடன் உள்ள உறவு குறித்து விளக்கியுள்ளார். இது கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான் கவுதமியுடன் நட்பில் இருக்கிறேன். அவருக்கு என்னால் முடிந்த அளவுக்கு பாசத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய வேதனையை நானும் என்னுடைய வேதனையை அவரும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் சட்டப்படியோ, தர்மப்படியோ தவறு என்று யாரும் சொல்வதில்லை. எங்களது உறவை புரியாமல் ஒருசிலர் விமர்சிக்கின்றனர். அதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை. என்னை சேர்ந்தவர்களும், என்னுடைய மகள்களும் என்னை சரியாக புரிந்து வைத்திருக்கின்றார்கள், அதுபோதும் எனக்கு.

வாணி, சரிகா போன்று கவுதமியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் அவரையும் பிரிந்துவிடுவீர்களா? என்று ஒருசிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் கூறிக்கொள்வது இதுதான். ஒருவருடன் சேர்ந்து வாழ்வதும், பிரிந்து வாழ்வதையும் முடிவு செய்வது காலம்தான். அதற்கு நாம் எல்லோரும் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
இவ்வாறு அந்த மலையாள நாளிதழுக்கு கமல் பேட்டி அளித்துள்ளார். அவருடைய பேட்டியால் கமல் கவுதமியுடன் கடைசி வரை இருப்பாரா? அல்லது கூடியவிரைவில் பிரிந்துவிடுவாரா?என்றுகோலிவுட்டில் பரபரப்புடன் விவாதித்து வருகின்றனர்.