ஜெயம் ரவியுடன் இதயத்திருடன் படத்தில் அறிமுகமாகி, பின்னர் தெலுங்கு கன்னடம் என தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை காம்னா ஜெத்மலானி காதலரை திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் போன்ற தமிழ்படங்களிலும் காம்னா நடித்துள்ளார். இவரும் பெங்களூரை சேர்ந்த சுராஜ் என்ற தொழிலதிபரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. சினிமா நண்பர்கள் யாருக்கும் இந்த திருமணம் குறித்து தகவல்கள் கொடுக்காமல் இருவீட்டார்களின் உறவினர்கள் மட்டும் பேசிமுடித்து திருமணத்தை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
வயதாகும் காம்னா, அவரைவிட வயது குறைந்தவரை காதல் செய்ததால் முதலில் இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும், ஆனால் காதலர்கள் பிடிவாதமாக இருந்ததால் பின்னர் இருவீட்டினர்களும் சம்மதித்து திருமணம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காம்னாவின் உறவினர் ஒருவர் தனது மகனுக்குத்தான் காம்னாவை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று தகராறு செய்துவந்ததால் திருமணத்தை வெகுவிமரிசையாக செய்யாமல் ரகசியமாக முடித்துவிட்டதாக காம்னாவின் நெருங்கிய தோழியாகவும் நடிகையாகவும் இருக்கும் ஒருவர் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.
