×

நியூ இயரில் ஸ்பெஷல் ட்ரீட் வைக்க காத்திருக்கும் ரஜினி!

வருகிற ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, ரஜினி தனது ரசிகர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கவிருக்கிறார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கோச்சடையான். இதில் சூப்பர் ஸ்டாருடன், தீபிகா படுகோனே, சரத்குமார், சோபனா, ஜாக்கி செராப், ஆதி, நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

அதிநவீன பெர்பாமென்ஷ் கேப்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டியில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றது ஈராஸ் நிறுவனம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் டீஸர் மற்றும் ஒரு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதன் ஆடியோவை வருகிற ரஜினியின் பிறந்த நாளுக்கு வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர்.

தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டை ஜனவரி முதல் வாரத்திலும், படத்தை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிலும் ரிலீஸ் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.