×

ஹன்சிகா திடீரென ஹாலிவுட் சென்றது ஏன்? அதிர்ச்சியில் கோலிவுட்!!

நடிகை ஹன்சிகா சென்ற வாரம் ஹாலிவுட்டுக்கு தனது தோழியுடன் சென்றுள்ளார். விடுமுறையை கழிக்கத்தான் ஹாலிவுட் சென்றிருப்பதாக கூறப்பட்டாலும், ஹாலிவுட் படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க வந்த அழைப்பின் பேரிலேயே அவர் ஹாலிவுட்டுக்கு சென்றிருப்பதாகவும், கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
அரண்மனை படத்தில் நடிப்பதற்காக ஜப்பான் சென்றிருந்த ஹன்சிகாவை அந்நாட்டு பிரதமர் பாராட்டி பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. இந்த செய்தியை பார்த்த ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தில் வரும் ஒரு சிறு கேரக்டருக்கு அவர் சரியாக வருவார் என்பதால் அவரிடம் தொடர்பு கொண்டு, போட்டோஷூட்டுக்கு அமெரிக்கா வருமாறு ஹன்சிகாவை கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே நீது சந்திரா போன்ற நடிகைகள் ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக பெருமையாக சொல்லிவிட்டு பின்னர் ஏமாந்த கதையை கேட்டறிந்த ஹன்சிகா, விடுமுறையை கழிக்க அமெரிக்காவுக்கு செல்வதாக தனது நட்பு வட்டாரங்களில் கூறிவிட்டு, சத்தமே இல்லாமல் அங்கு போட்டோஷுட்டில் கலந்து கொண்டு இருக்கின்றாராம்.
இந்த தகவலை அவருடன் சென்ற தோழி, தனது குடும்பத்தினர்களுடன் பகிர்ந்துள்ளார். அது அப்படியே கசிந்து தற்போது கோல்வுட் வரை வந்துவிட்டது. சிம்புவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் மன விரக்தியில் உள்ள ஹன்சிகாவுக்கு ஹாலிவுட் பட வாய்ப்பு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாக அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.