×

சிம்புவுக்கு பார்க்க கொடுத்து வைக்காத நயன் தாராவின் நீச்சலுடை காட்சிகள்.!!

சிம்புவுடன் வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜோடி சேருகிறார் நயன் தாரா.
நயன் தாரா, சிம்பு, நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.நயன் தாராவின் கால்ஷீட் ஜனவரி 6ஆம் தேதி முதல்தான் இருப்பதால் அவர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. சிம்பு, சூரி நடித்த காமெடி காட்சிகள் இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர்களிடம் 6ஆம் தேதி முதல் ஐக்கியமாகிறார் நயன்.
சிம்பு, நயன் நடிக்கும் முதல் காட்சியே காதல் ரசம் சொட்ட சொட்ட வரும் ரொமாண்டிக் காட்சிதானாம். இந்த படத்தில் நடிக்க நயன் தாரா கண்டிஷன் போட்டுள்ளதால், இருவரும் சேர்ந்தபடி இருக்கும் கிளாமர் காட்சிகள் கண்டிப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நயன்தாரா மட்டும் தனியாக நடிக்கும் பாடல் காட்சிகளில் கிளாமர் தூக்கலாக இருக்கும் என கூறப்படுகிறது. மழையில் நனையும் படு கிளாமரான காட்சிகள், குளியலறை காட்சிகள், நீச்சலுடை காட்சிகள் இவையெல்லாம் திரைக்கதையில் இருக்கின்றதாம். நயன் தாராவும் இந்த காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். ஆனால் இந்த காட்சிகளில் ஒரு இடத்தில்கூட சிம்பு உடன் இருப்பதில்லை என்பதுதான் நயன் தாரா ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம்.
நயன் தாராவுக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளதால் இந்த படத்தை தெலுங்கிலும் ரிலீஸாக்க முடிவு செய்துள்ளார் பாண்டிராஜ். சூரி தவிர தெலுங்கிலும் இதே நடிகர்கள்தான் நடிப்பார்களாம். சூரிக்கு பதிலாக தெலுங்கு காமெடி நடிகர் ராஜேஷ் நடிக்க உள்ளார்.