| தனுஷ் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஸ்பெஷல் கிப்ட் அளிக்கவுள்ளார். |
| ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பாலுடன் ஜோடி சேர்ந்துள்ளப் படம் 'வேலையில்லா பட்டதாரி'. 'கொலைவெறி' புகழ் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் பிலிம்ஸ்' சார்பில் தனுஷே தயாரிக்கிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிஸரை வருகிற டிசம்பர் 25ம் திகதி கிறிஸ்துமஸ் பரிசாகவும், பாடல்களை ஜனவரி 3ம் திகதி புத்தாண்டு பரிசாகவும் அளிக்கவுள்ளார் தனுஷ். தற்போது தனுஷ் கே.வி.ஆனந்தின் அனேகன் மற்றும் இந்தியில் பால்கி இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்திலும் பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. |
.jpg)