×

ரஜினியை அவமானப்படுத்தினாரா நடிகை டாப்சி. ரசிகர்கள் கொந்தளிப்பு. !!


ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி, அஜீத்துடன் ஆரம்பம் வரை நடித்துள்ள நடிகை டாப்ஸி, சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியை அவமதித்து கூறியதாக ரஜினி ரசிகர்கள் டாப்ஸியை கோபத்துடன் திட்டி தங்கள் கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். ரஜினியின் பிறந்தநாள் நெருங்கும் வேளையில் ரஜினி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய டாப்சிக்கு கண்டனங்கள் குவிகிறது.
“தலைவரின் ரசிகை என்று சொல்வதை விட தல’யின் ரசிகை என்று சொல்வதையே நான் பெருமையாக நினைக்கிறேன்” என்று சமீபத்தில் டாப்ஸி கூறியதாக சில இணையதளங்களில் செய்தி பரவியது. இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர். டாப்ஸியை கடுமையான சொற்களால் திட்டி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் கருத்து தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியைடந்த டாப்சி, தான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டனர் என்றும், நான் எப்பொழுதுமே ரஜினியை மதிப்பவள் என்றும், அவரை அவமானப்படுத்தவேண்டும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தும் இந்த பிரச்சனையை ரஜினி ரசிகர்கள் விடாமல் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் இதுபோல அஜீத்தின் படத்தை விட விஷாலின் படம் சிறந்தது என்று கருத்துக்குறி, நடிகை வரலட்சுமி வாங்கிக்கட்டிகொண்டதை நாம் எல்லோரும் அறிவோம்.