×

முதல் படமே தோல்வியா? அதிர்ச்சியில் ஆர்யா!!

ஆர்யாவின் தயாரிப்பில் அவரது தம்பி சத்யா நடிக்கும் அமரகாவியம் என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை விஜய் ஆண்டனியின் ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்குகிறார். மியா என்ற புதுமுகம் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.இந்த படத்தின் 75 சதவிகித படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டன. பெரும்பாலான காட்சிகள் ஊட்டியில் எடுக்கப்பட்டுள்லது. காதல் மற்றும் த்ரில் கதை கொண்ட இப்படம் தற்போது 1.45 மணிநேர படமாக இருக்கின்றது. இன்னும் 20 நிமிடக்காட்சிகளே பாக்கி உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை எடுத்தவரை பார்த்த ஆர்யாவுக்கு படம் குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம். காட்சியமைப்புகள் கோர்வை இல்லாமலும், தெளிவில்லாமல் இருந்ததாக இயக்குனரை கடிந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம் ஜீவா ஷங்கர். முதல் தயாரிப்பு படமே தோல்வியாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக தனக்கு தெரிந்த இயக்குனர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார் ஆர்யா. அவர்கள் எடுத்தவரை இருக்கட்டும் என்றும், மீதியுள்ள இருபது நிமிடக்கதையில் நீங்கள் கெளரவ வேடத்தில் நடித்து படத்தை ஒப்பேற்றுங்கள் என்று ஐடியா கூறியுள்ளனர். எனவே க்ளைமாக்ஸ் காட்சியில் ஹீரோவுக்கு உதவுவதுபோல ஆர்யா இந்த படத்தில் நடிக்கிறாராம்.
ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுத்தமாக ஆர்யாவுக்கு பிடிக்கவில்லையாம். முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்று ஜடம் போல நடித்துள்ள ஹீரோயினை திட்டி தீர்த்துவிட்டாராம் ஆர்யா. இதனால் படக்குழுவினர் பெரும் பரபரப்பில் உள்ளனர்.