சமீபகாலமாக பல சறுக்கல்களையும், சர்ச்சைகளையும் சந்தித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் சந்தானம். ஒரு காலக்கட்டதில் திரையுலகம் இவருக்கு ஏர்முகமாகவே இருந்தது, கதநாயகர்களின் கால்ஷீட் கிடைப்பதை விட இவரது கால்ஷீட் எப்போ கிடைக்கும் என்று ஏங்கி கிடந்தனர் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். ஆனால் இப்போதெல்லாம் ”பழக பழக பாலும் புளிக்கும்” என்பது போல் சந்தானம் காமெடிகள் மக்களுக்கு புளித்துவிட்டது.
இதற்கு காரணம் அவர் நடிக்கும் படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. முதலில் இதை கண்டும் காணாததை போல இருந்தது நம்ப சென்சார்போர்டு. ஆனால் இப்போது ஒவ்வொரு படத்திற்கும் இவரது ஆபாச வார்த்தைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதால் சந்தானம் நடித்த படம் சென்சாரின் பார்வைக்கு வருகிறது. இப்போதெல்லாம் சந்தானத்தின் படம் என்றாலே சென்சார்போர்டில் கையில் கத்தரிக்கோலை வைத்துக்கொண்டு இருகிறார்களாம் . இதனால் சந்தானமும் அவர் டீமும் எப்படி காமெடி பன்னுவது என்று தலையை பிச்சிக்கொண்டு இருக்கின்றனர்.
( பாஸ் இதுக்குதான் எப்போவும் ரொம்ப ஓவராக பேசிகொண்டு ஒரே மாதரியான காமெடிகளில் நடிக்கக்கூடாது)
இந்த ஆண்டில் காமெடியில் ஏறுமுகமாக இருப்பவர் பரோட்டா சூரிதான், சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றதும் உடனே சூரிக்கு போன் பறக்கிறதாம்.
(பாஸ் என்ன இருந்தாலும் காமெடி புயல்கள் வடிவேலும், கவுண்டமணியும் மறுபடியும் வராங்க கொஞ்சம் நினைவில் வச்சிக்கங்க அப்புறம் ஒரே அடியா சறிக்கிடுவிங்க…)
