வினியோக உரிமை விற்பனையில் தூள் கிளப்பியுள்ளதாம் விஜய்யின் ஜில்லா. ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் விஜய், காஜல் அகர்வால், மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், மகத் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜில்லா.
இப்படம் பொங்கல் ஜல்லிகட்டில் களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஜில்லா படத்தின் வினியோக உரிமையை விற்பது குறித்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அறிவிப்பு வெளியிட்டார்.
அறிவிப்பு வெளியிட்ட இரண்டே நாட்களில் ஜில்லா வினியோக உரிமை பரபரவென விற்றுத் தீர்ந்தது.
சென்னை நகர வினியோக உரிமையை பிரபல கேரள வினியோகஸ்தரான தமீன்ஸ் பிலிம்ஸின் ஷிபு வாங்கியுள்ளார். இவர் பல தமிழ் படங்களை வாங்கி வினியோகித்தவர்.
திருச்சி நகரின் வினியோக உரிமையை பாஸ் பிலிம்ஸும், கோவை நகர வினியோக உரிமையை காஸ்மோ சிவாவும் வாங்கியுள்ளனர். கோவை நகர உரிமை பெரிய தொகைக்கு சென்றுள்ளதாம்.
ஜில்லாவில் விஜய்யின் தந்தையாக நடிக்கும் மோகன்லால் இந்த படத்தின் கேரள வினியோக உரிமையை வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.