தமிழ்சினிமாவில் அண்மைக்காலமாக எழுப்பப்படும் பிரச்சனை ஒன்று எல்லா ஹீரோயின்களையும் அலர்ஜியில் ஆழ்த்தியிருக்கிறது.
எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளுக்கும் அப்படத்தில் நடித்த ஹீரோயின்கள் வருவதில்லை என்பதுதான் அந்த பிரச்சனை. இனிமேல் அப்படி வராத நடிகைகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறிவருகிறார்கள். ஆனால் நடிகைகள் தரப்பில் சொல்லப்படும் பதிலையும் நாம் கேட்க வேண்டுமல்லவா? இது குறித்து நம்மிடம் புலம்பினார் பெயர் சொல்ல விரும்பாத ஒரு நடிகை.
எங்களை முறையாக அழைத்தால் நாங்கள் வர மாட்டோம்னு சொல்லவே மாட்டோம். ஆனால் எங்களை அப்படி அழைப்பதில்லை என்கிறார் இவர் . அதென்ன முறைப்படி? தமிழ்சினிமாவில் நடிக்கிற நடிகைகளில் 90 சதவீதத்தினர் வெளிமாநிலங்களில் வசிக்கும் நடிகைகள்தான். சிலர் படப்பிடிப்பு முடிந்தவுடன் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிற வழக்கம் உள்ளவர்கள். பிசியாக இருக்கும் வேறு பலர் வேறொரு ஷுட்டிங்கில் இருப்பார்கள். இவர்கள் அழைக்கிற நேரத்தில் இந்த விழாவுக்கு சென்றுவர சம்பந்தப்பட்ட இயக்குனரோ தயாரிப்பாளரோ ஒப்புதல் தர வேண்டும். பெரும்பாலும் இது நடப்பதில்லை.
சரி, சொந்த ஊருக்கு போயிருக்கும் ஹீரோயின்களாவது வரலாமே என்றால் அங்குதான் சிக்கலே. உங்க பணத்தை போட்டு டிக்கெட் எடுத்துட்டு வாங்க. இங்கே வந்ததும் கொடுத்துடறேன் என்பார்கள். ஆனால் வந்த பின்பு அது வரவே வராது. அதுமட்டுமல்ல, அப்படி வரும் எங்களை முறையாக ஏர்போர்டிலிருந்து அழைத்து வர கார் வசதி செய்து தர மாட்டார்கள். சிட்டிக்குள் வந்துவிட்டாலோ, நமக்காக போடப்பட்டிருக்கும் ஓட்டல் மிக பாடாவதியாக இருக்கும். நடுத்தர சம்பளம் வாங்கும் நடிகைகளுக்கும் அறிமுக நடிகைகளுக்கும் இங்கே இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. அதே நேரத்தில் பெரிய நடிகைகள் என்றால் அவர்கள் வைக்கும் செலவை மனதில் கொண்டு சில தயாரிப்பாளர் கள் விழாவுக்கு அழைப்பதேயில்லை என்று குமுறி தீர்த்துவிட்டார் அந்த நடிகை.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் இது போன்ற விழாக்களுக்கு தங்கள் செலவில் டிக்கெட் போட்டு வந்தால் என்ன தவறு? வரட்டுமே… என்கிறார்கள் தயாரிப்பாளர் கள் தரப்பில். இந்த மோதலும் விளக்கமும் எந்த முடிவையும் தராது என்பது ஒருபுறம் இருக்கட்டும்… நடிகை அமலாபாலின் கருத்து என்ன? நான் ஒரு இந்திப்படத்தையே இந்த பிரமோஷன் என்கிற சடங்கு சம்பிரதாயங்களுக்கு அஞ்சி வேண்டாம் என்று கூறிவிட்டேன் என்கிறார் அவர்.
அங்கெல்லாம் படப்பிடிப்புக்கு கால்ஷீட் தேதிகள் கேட்கும்போதே கூடுதலாக பதினைந்து நாட்களோ, அல்லது ஒரு மாதமோ கேட்கிறார்களாம். இதற்கென தனியாக சம்பளமும் தருவதில்லை அவர்கள். இப்படி ஒதுக்கி தரப்படும் தேதிகளில் நான் வேறு மொழி படம் எதிலாவது நடிக்க ஒப்புக் கொண்டால் அரை படத்தின் ஷுட்டிங்கே முடிந்திருக்குமே என்பது அமலாபாலின் விளக்கம்.
இந்த விஷயத்தில் இவ்வளவு வாக்குவாதங்கள் இருப்பதால் இந்த பிரச்சனைக்கான தீர்வு இப்போது மட்டுமல்ல, எப்போதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.