ஜில்லா படத்தில் விஜய் பாடியுள்ள கண்டாங்கி கண்டாங்கி பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பொங்கல் ‘தல’ பொங்கல் மட்டும் அல்ல ‘தளபதி’ பொங்கலும் கூட தான். ஆம், அஜீத்தின் வீரம் படமும், விஜய்யின் ஜில்லா படமும் பொங்கலுக்கு ரிலீஸாகின்றன. இந்நிலையில் விஜய் படத்திற்கு ஒரு பாட்டு எழுதியுள்ளார் வைரமுத்து.
பல ஆண்டுகள் கழித்து விஜய் படத்திற்கு பாட்டு எழுதியுள்ளார் கவிஞர் வைரமுத்து. கண்டாங்கி கண்டாங்கி…கட்டி வந்த பொண்ணு…கண்டாலே கிறுக்கேத்தும்…கஞ்சா வச்ச கண்ணு என்ற அந்த பாடலை தான் ஜில்லா படத்திற்காக எழுதியுள்ளார் வைரமுத்து.
வைரமுத்துவின் பாடல் வரிகளை படித்துப் பார்த்த இசையமைப்பாளர் இமான் அதிர்ச்சி அடைந்தார். காரணம் கஞ்சா வச்ச கண்ணு என்ற வரி தான். இந்த வரியை சென்சார் போர்டு கத்தரித்துவிடாதா என்று அஞ்சினார்.
இமான் வைரமுத்துவுக்கு போன் போட்டு கஞ்சா வச்ச கண்ணு வரி குறித்த தனது பயத்தை தெரிவித்தார். வைரமுத்துவோ சிரித்துவிட்டு, கஞ்சா வச்ச பொண்ணைத் தான் பிடிப்பாங்க இமான். கஞ்சா வச்ச கண்ணை பிடிக்க மாட்டார்கள். அப்படி சென்சாரில் சந்தேகம் வந்தால் நான் நேரில் வருகிறேன் என்றார். இதையடுத்து தான் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
கண்டாங்கி கண்டாங்கி பாடலை விஜய் பாடியுள்ளார். அவரது ஹிட் பாடல்கள் வரிசையில் இதுவும் சேரும் என்று அவர் தீர்க்கமாக நம்புகிறார்.